குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (வயது41) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிவராமன் (வயது22) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்து உள்ளார்.

இதுவரை கோவை மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்ட 30 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும், 2 நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story