குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகரில் உள்ள சீனிவாசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்பாபு (வயது 31). ராணிப்பேட்டை அருகே உள்ள மாந்தாங்கல் பத்மநாபன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்கிற ரஜினிமுருகன் (27). இவர்கள் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளின் காரணமாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய்து செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரின் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story