திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:45 PM GMT)

திருவட்டார் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கன்னியாகுமரி

திருவட்டார்,

மாராயபுரம் பாறாவிளையை சேர்ந்த மகேந்திரகுமார் (49), மருதன்கோடு செம்மண்காலாவை சேர்ந்த கிளைன் (27) ஆகிய 2 பேர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் இருவரையும் கடந்த மார்ச் மாதம் திற்பரப்பு அருவி பகுதியில் வைத்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். பின்னர் கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story