55 கிலோ கடல் அட்டைகளுடன் 2 பேர் கைது


55 கிலோ கடல் அட்டைகளுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே 55 கிலோ கடல் அட்டைகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே புதுப்பட்டினம் பகுதியில் உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனவர்கள் சிவசுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று பிற்பகலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டுகொள்ளான் பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள பனந்தோப்பு காட்டுக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் 55 கிலோ அவித்த கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் இது தொடர்பாக புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த சீனிவாசகன் மகன் நாகூர் (வயது 45) அறிவழகன் மகன் வசந்த் (23) ஆகிய இருவரையும் பிடித்தனர். இவர்கள் இருவரையும் பறிமுதல் செய்த கடல் அட்டையுடன் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் வனச்சரகர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் மேற்கண்ட இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story