6 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
6 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் சூலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் 2 பேர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அந்தப்பைகளில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் சாம்பார் கோட் என்ற பகுதியில் இருந்து இனம் தெரியாத நபரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகவும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மண்ேகாட்டபுரம் ராஜீ என்ற ராஜபாண்டி (வயது29), சேலம் கீழநாயக்கன்பட்டி குறிஞ்சிநகரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்ற சின்னா (23) என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு மேற்படி 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.