650 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது
650 கிலோ குட்காவுடன் 2 பேர் கைது
வாடிப்பட்டி,
சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் ஏட்டுகள் மணிகண்டன், சேதுராமன் ஆகியோர் பரவை கண்மாய்கரையில் வாகன சோதனை செய்தனர். அப்போது மொபட்டில் தெப்பக்குளத்தை சேர்ந்த குண சேகரன் (வயது 46) என்பவர் கொண்டு வந்த சாக்கு மூடையை பிரித்து சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட பாக்கெட் குட்கா, போதை பாக்குகள் இருப்பது தெரியவந்தது. அதன்பின் அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததன் பேரில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (53) என்பவரிடம் இருந்து விற்பதற்காக வாங்கி வந்ததாக ஒப்புக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து வில்லாபுரத்தில் விஜயகுமாருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 650 கிலோ குட்கா பாக்குகள், மொபட், மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக சமய நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவபாலன் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், குணசேகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.