விக்கிரவாண்டியில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து நகை-பணம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேருக்கு வலைவீச்சு


விக்கிரவாண்டியில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து நகை-பணம் திருட்டு கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து நகை-பணத்தை திருடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்(வயது 42) பூ வியாபாரியான இவர் தனது மகள் வித்யாவிற்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக கணேஷ், தனது மகளுடன் மோட்டாா் சைக்கிளில் விக்கிரவாண்டிக்கு வந்தார். பின்னர் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று, தனது கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்தார். மேலும், நகை கடன் பெறுவதற்கு வீட்டில் இருந்து எடுத்து வந்த 2 பவுன் நகையை வங்கியில் கொடுத்து கடன் கேட்டுள்ளார். ஆனால் கணேஷ் ஆதார் அட்டை எடுத்து வராததால், கடன் பெற முடியவில்லை. இதையடுத்து அவர் 2 பவுன் நகையையும், ரூ.50 ஆயிரத்தையும் ஒரு பையில் போட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து மூடினார். பின்னர் கணேசும், வித்யாவும், அங்கிருந்து புறப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் டீக்குடிக்க சென்றனர். அப்போது நகை மற்றும் பணத்தை மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்தனர். பின்னர் இருவரும் டீக்குடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் பெட்டி மூடி திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த பையை காணவில்லை.

திருட்டு

இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ், இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்காத்தமுத்து மற்றும் போலீசார், அங்கு விரைந்து வந்து டீக்கடை பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கணேசின் மோட்டார் சைக்கிள் பெட்டியை 2 பேர் கள்ளச்சாவி மூலம் திறந்துள்ளனர். பின்னா் அதில் இருந்த பையை திருடி இடுப்பில் வைத்து மறைத்து மற்றொரு மோட்டார்சைக்கிளில் திண்டிவனம் நோக்கி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம்-நகையை திருடிச்சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story