கடைகளில் செல்போன்களை திருடிய 2 பேர் சிக்கினர்
கடைகளில் செல்போன்களை திருடிய 2 பேர் சிக்கினர்
கோவை
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அருண் ஜஸ்டின் ராஜ் (வயது 40). இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 1-ந் தேதி காலை வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்றார். அங்கு கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை சார்ஜ் போட்டு வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது செல்போனை காணவில்லை. கடைக்கு வந்த யாரோ செல்போனை திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் இது குறித்து அவர் சாய்பாபாகாலனி போலீசில் புகார் அளித்தார். அன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வால்பாறையை சேர்ந்த விஜயகுமார் (37) என்பவர் கடைக்கு வந்தபோது செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.
இதேபோல் சிங்காநல்லூரை சேர்ந்தவர் முருகன் (28). இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் கடையில் இருந்து ஒரு செல்போனை சார்ஜ் போட்டு வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் கடைக்கு வந்தார். அவர் கடையில் இருந்து செல்போன்களின் விலையை கேட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென சார்ஜர் போட்டு வைத்து இருந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முருகன் அவரை அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் சிங்காநல்லூர் கள்ளிமடையைச் சேர்ந்த விஸ்வநாதன் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Reporter : S.MUTHUKUMAR_Staff Reporter Location : Coimbatore - Coimbatore