விஷம் குடித்து 2 பேர் தற்கொலை


விஷம் குடித்து 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2023 8:00 PM GMT (Updated: 11 Aug 2023 10:08 AM GMT)

விஷம் குடித்து 2 பேர் தற்கொலை

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தை அடுத்த வடசித்தூரை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32). சலவை தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கார்த்திக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோன்று நெகமத்தை அடுத்த வடசித்தூர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன்(36). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகா(32). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முருகேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


Next Story