வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Jan 2023 1:00 AM IST (Updated: 10 Jan 2023 3:33 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்

திருச்சி கல்லுக்குழி 1-வது தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம்(வயது 49). இவர் திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவலிங்கம் வீட்டில் இருந்த திராவகத்தை (ஆசிட்) எடுத்து குடித்துள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

இதேபோல் திருச்சி புத்தூர் ராஜரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை(44). டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் மது போதைக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story