மதுவுக்கு அடிமையான பெயிண்டர் உள்பட 2 பேர் தற்கொலை


மதுவுக்கு அடிமையான பெயிண்டர் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் மதுவுக்கு அடிமையான பெயிண்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் மதுவுக்கு அடிமையான பெயிண்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பெயிண்டர்

நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45). பெயிண்டர். இவர் மனைவி, மகளை பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக தனது அண்ணன் சிவபெருமாள்வீட்டில் தங்கி இருந்தார். குடிபழக்கத்துக்கு அடிமையான குணசேகரன், அதில் இருந்து விடுபட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

இதேபோல் திருச்சி பெரிய மிளகு பாறை காமராஜ் மன்ற தெருவை சேர்ந்தவர் சாலமன் சத்யநாதன் (36).காதல் திருமணம் செய்த இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் சாலமன் சத்யநாதன் குடிபழக்கத்துக்கு அடிமையானார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சாலமன் சத்யநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story