வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

கோவையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

கோயம்புத்தூர்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரசனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவர் கோவையில் உணவு வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கார்த்திக் மோட்டார் சைக்கிளில் கோவை காந்திபுரம்- சத்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.


ஆம்னி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பஸ் டிரைவர் முருகானந்தம் (49) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல நீலாம்பூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (23). இவர் ஒண்டிப்புதூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை இவர் முந்தி செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.


Next Story