தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு


தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தனியார் நிறுவன ஊழியர்

பொள்ளாச்சி பி.கே.எஸ். காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் குணாளன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்த ஜேஸ்கர் என்பவரது மகன் சந்தோஷ் (22). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் குணாளன், சந்தோஷ் ஆகியோர் ஆழியாறுக்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா சென்றனர்.

ஆழியாறு அணை பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பொள்ளாச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இதில் சந்தோசும், குணாளனும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை சந்தோஷ் ஓட்டி வர, பின்னால் குணாளன் அமர்ந்து இருந்தார். அங்கலகுறிச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முன் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

போலீசார் விசாரணை

அப்போது முன்னால் சென்ற காரை முந்த முயன்ற போது, எதிரே ஒரு வாகனம் வந்ததாக தெரிகிறது. அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க சந்தோஷ் திருப்பிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் சந்தோசும், குணாளனும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரின் உடலையும் பரிசோதனை செய்த டாக்டர், அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆழியாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story