அளவுக்கு அதிகமாக மதுகுடித்த டிரைவர் உள்பட 2 பேர் பலி


அளவுக்கு அதிகமாக மதுகுடித்த டிரைவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அளவுக்கு அதிகமாக மதுகுடித்த டிரைவர் உள்பட 2 பேர் பலி

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி டிரைவர்

கோவை சாய்பாபா காலனி தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49). லாரி டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இவர் நேற்று முன்தினம் வேலாண்டிபாளை யம் சாஸ்திரி தெருவில் மது குடித்தார். அப்போது அவர், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதையில் லாரிக்குள் மயங்கி விழுந்தார்.

இதை அறிந்த அவரது நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் காமராஜின் குடும்பத்தினர் வந்து பார்த்தனர். அப்போது காமராஜ் அதிகளவு மது அருந்தியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார், காமராஜின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காமராஜ் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதியவர் சாவு

இதேபோல் கோவை சரவணம்பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் கண்ணுசாமி எபினேசர் (73). குடிப்பழக்கம் உடைய இவர் கடந்த 22-ந் தேதி இரவு டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார். பின்னர் அவர், வீட்டுக்கு செல்வதற்காக விளாங்குறிச்சி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக பீளமேடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தது தெரிய வந்தது. கோவையில் அதிகளவு மது குடித்த 2 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


1 More update

Next Story