காட்டு பன்றியை கூறுபோட்ட 2 பேருக்கு அபராதம்


காட்டு பன்றியை கூறுபோட்ட 2 பேருக்கு அபராதம்
x

காட்டு பன்றியை கூறுபோட்ட 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் பிரிவு புலியூர் காப்பு காட்டு பகுதியில் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 44) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிருக்கு நேற்று முன்தினம் இரவு வந்த காட்டுப்பன்றியை, அவரது வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் அந்த காட்டுப்பன்றி இறந்தது. இதனை நேற்று காலை வந்து பார்த்த சங்கரும், ஆலம்பாடியை சேர்ந்த சுப்ரமணியனும் (44) சேர்ந்து காட்டுப்பன்றியை யாருக்கும் தெரியாமல் கூறு போட்டு கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டுப்பன்றியின் உடலை மீட்டு, சங்கரையும், சுப்ரமணியன் ஆகியோரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு அபராதமாக ரூ.30 ஆயிரமாக விதித்து வசூலித்து எச்சரித்து அனுப்பினர்.


Next Story