கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
கணபதி
திருச்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது31). இவர் கோவை கணபதி பகுதியில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கார்த்திகேயன் மணியக்காரம்பாளையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் கத்தி முனையில் மிரட்டி கார்த்திகேயனிடம் இருந்த பணம் ரூ.500-ஐ பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து கார்த்திகேயன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கோவை நல்லாம்பாளையம் சங்கனூர் ரோட்டை சேர்ந்த பழக்கடை ஊழியர் லோகேஷ் (20), கோவையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவரான திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த கவின் ரிஷப் (20) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.