வெவ்வேறு சம்பவங்களில் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் மாநகராட்சி ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பில் கலெக்டர்
திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் கணேஷ் (வயது 34). இவர் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கணேஷ் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் மாலையில் திடீரென்று அவர் வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது மனைவி என்ன என்று கேட்டபோது, கடன் தொல்லையால் எலி மருந்து (விஷம்) தின்றுள்ளதாக கூறினார். இதனையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தற்கொலை
முசிறியை அடுத்த சோளம் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ரேவதி (30). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ரேவதி தனி குடித்தனம் செல்ல சுரேஷிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த ரேவதி தனது உடல்மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.