கார்கள் மோதலில் மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேர் பலி
கீழ்பென்னாத்தூரில் கார்கள் நேருக்கு நேர் ேமாதிக்கொண்ட விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேர் பலியானார்கள்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் கார்கள் நேருக்கு நேர் ேமாதிக்கொண்ட விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேர் பலியானார்கள்.
கார்கள் மோதல்
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மருந்து விற்பனை பிரதிநிதியான கிஷோர் (வயது 34) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை கடந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது பெங்களூருவிலிருந்து எதிர்திசையில் புதுச்சேரியை நோக்கி சந்திராம்மாள் (வயது 52) என்பவர் உள்பட 6 பேர் காரில் வந்து கொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் புற வழிச்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வந்தபோது 2 கார்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் 2 கார்களின் முன் பக்கமும் முழுவதுமாக நொறுங்கி சேதம் அடைந்தன.
அந்த பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சென்னையில் இருந்து வந்த காரில் இருந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆம்புலன்சுகள்
பெங்களூருவில் இருந்து வந்த காரில் சந்திராம்மாள் உள்பட 6 பேரும், சென்னையிலிருந்து வந்த காரை ஓட்டி வந்த டிரைவரும் படுகாயத்துடன் துடித்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஏற்றப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சந்திராம்மாள் இறந்து விட்டார். மற்ற அனைவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.