பெண் உள்பட 2 பேர் மாயம்
பெண் உள்பட 2 பேர் மாயம் ஆனார்.
கரூர்
குளித்தலை அருகே சேப்ளாபட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சங்கீதா (வயது18). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சங்கீதா தாய் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, சங்கீதாவை தேடி வருகின்றனர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகர் 4-வது தெரு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (40). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லையாம். இதுகுறித்து சிவகுமாரின் தாய் மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, சிவகுமாரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story