வெவ்வேறு சம்பவங்களில் பாதிரியார் உள்பட 2 பேர் சாவு
வெவ்வேறு சம்பவங்களில் பாதிரியார் உள்பட 2 பேர் இறந்தனர்.
திருச்சி, கே.கே.நகர், காஜாமலைபகுதியில் உள்ள ஒரு விடுதியில் வசித்து வந்தவர் ஜோசப் என்ற பயஸ் (வயது 57) பாதிரியரான இவர் குடலிறக்கம் மற்றும் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர். சம்பவத்தன்று விடுதியில் இருந்த ஜோசப்புக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி பொன்னகர் 2-வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் ரெமோ (32). இவர் டைல்ஸ் வியாபாரம் செய்து வந்தார். இவர் தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் இவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.