பள்ளி மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை


பள்ளி மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை
x

தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தர்மபுரி

மொரப்பூர்

பள்ளி மாணவன்

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியை சேர்ந்தவர் காவேரி மகன் சிவகிரி (வயது 14). இவன் ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் சிவகிரி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். இதை மாணவனின் தாயர் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

தர்மபுரி பிடமனேரி ரங்கா நகரை சேர்ந்தவர் பச்சியப்பன் (50). கூலித் தொழிலாளி. மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. இதனால் மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று பென்னாகரம் அருகே சிக்கனம்பட்டியில் உள்ள மயானத்திற்கு சென்ற பச்சியப்பன் தனது தந்தை சமாதி மீது விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story