விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலி
விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலி
ராமநாதபுரம்
பனைக்குளம், மே.21-
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் சித்தார்கோட்டை அருகே உள்ள பழனிவலசை என்ற கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அரிஸ்டாட்டில்(வயது 22). இவர் இலவசமாக யோகா, சிலம்பம் வகுப்புகள் நடத்தி வந்தார். இந்தநிலையில் கீழக்கரையில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 7-ம் வகுப்பு படித்து வரும் யோகா மாணவன் வெற்றிவேல் என்பவரை அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தேவிபட்டினத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெற்கு பெருவயல் கிராமத்தின் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Related Tags :
Next Story