வாலிபர் உள்பட2 பேர் தற்கொலை
தனித்தனி சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலையை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது 24). இவர் தனது மனைவியை கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார். மணிகண்டனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதைபார்த்த மணிகண்டனின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே வடக்குத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (32). இவர் விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைபார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.