வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை


வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Feb 2023 1:28 AM IST (Updated: 28 Feb 2023 5:12 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஒரு தலைக்காதல்

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், நாதர்நகர் பத்திரக்கார தெருவை சேர்ந்தவர் காதர்பயக். இவரது மகன் முபாரக் பாட்ஷா (வயது 22). இவர் ஒருதலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் இவரை காதலிக்கவில்லையாம். இதனால் மன அழுத்தத்தில் இருந்த முபாரக் பாட்ஷா வீட்டில் யாரும் இல்லாத போது உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

கொத்தனார்

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை, ஐய்யம்பட்டி, அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் வடிவேலு (45). கொத்தனாரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவர் அடிக்கடி வேலைக்கு செல்வதில்லையாம்.

இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று வீட்டில் வடிவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story