வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கரூர் பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கரூர்

வாலிபர் தற்கொலை

கரூர் அருகே உள்ள மரவாபாளையம் புதுத்தெருவை சேர்ந்தவர் சந்தானம் (வயது 29). இவரது மனைவி ரஞ்சிதா. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தானம் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார்.

இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தானத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

கரூர் காதப்பாறை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சின்ராஜ் (56). தொழிலாளியான, இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் சின்ராஜ் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சின்ராஜ் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார்.

இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சின்ராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story