பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வேலூர்

வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 14 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், அக்ராவரம் மெயின்ரோட்டை சேர்ந்த அமுல்ராஜ் என்பவரது மனைவி செல்வி (வயது 48), ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராம்ராய்பெட்டாவை சேர்ந்த சத்தியசாய்ஜெகதீஷ் (35) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து சேலம் மற்றும் கோவை ஜெயிலில் அடைத்தனர். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story