இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை


இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருநெல்வேலி

நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இளம்பெண்

நெல்லை டவுன் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிராஜ். இவருக்கு ரம்யா என்ற மனைவியும் மகா பவித்ரா (வயது 18), அனுபிரியதர்ஷினி ஆகிய 2 மகள்களும், தங்கவேல் என்ற மகனும் உண்டு. மகா பவித்ரா பிளஸ்-2 படித்து விட்டு, அரசு போட்டி தேர்வுக்கு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் டிரைவர்

இதேபோன்று நெல்லை டவுன் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சிவசுப்பிரமணியன் (25). இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதனால் மாடிக்கு சென்று குடும்பத்தினர் பார்த்தபோது, அங்குள்ள அறையின் கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே ஜன்னல் வழியாக பார்த்தபோது சிவசுப்பிரமணியன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story