மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்


மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்
x

பணி நேரத்தில் மது அருந்திய மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை டி.வி.எஸ்.நகர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றியவர் இளநிலை பொறியாளர் தாணுமூர்த்தி. இவர் பணி நேரத்தில் மது அருந்தியதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மதுரை மேற்கு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் லதா விசாரணைக்கு உத்தரவிட்டார். அப்போது மது அருந்தியது உண்மை என தெரிய வந்தது. தாணுமூர்த்தியும், அவருடன் மது அருந்திய மற்றொரு அலுவலர் ஒருவர் ஆகிய 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

1 More update

Related Tags :
Next Story