'போக்சோ'வில் அச்சக உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


போக்சோவில் அச்சக உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 May 2023 7:00 PM GMT (Updated: 2 May 2023 7:00 PM GMT)

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அச்சக உரிமையாளர் உள்பட 2 பேைர போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி சேவா சங்கம் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 76). இவர் சொந்தமாக அச்சகம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவரது நண்பர் சின்னாளப்பட்டி கவுண்டர் தெருவை சேர்ந்த பாபு (56). இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கேசவனும், பாபுவும் ேசர்ந்து 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் அண்ணன் சின்னாளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா மேரி விசாரணை நடத்தினார். பின்னர் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கேசவனையும், பாபுவையும் கைது செய்தார்.


Related Tags :
Next Story