கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது
கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
குளித்தலை சுங்ககேட் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கரூர் பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த குளித்தலை அருகே உள்ள பெரியபனையூர் இந்திரா நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் பகுதிைய சேர்ந்த உமா (64) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள விதை இலை தலைகளுடன் கூடிய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story