மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது


மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
x

குடியாத்தம் அருகே மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பதாக வந்த புகார்களின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, பழனிவேலு உள்ளிட்ட போலீசார் சேங்குன்றம் கிராமத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனை செய்ய மது பாட்டில்களை வைத்திருந்த சரஸ்வதி (வயது 40) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

அதேபோல் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் எம்.ஜி.ஆர். நகர் புதுமனை பகுதியில் மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த ராஜா (41) என்வரையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story