மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
ஒரத்தநாடு பகுதியில் மதுவிற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதாராணி தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற ஒக்கநாடு கீழையூர் ராதாகிருஷ்ணன் (வயது55), ஆழிவாய்க்கால் கோமதி (35) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணன், கோமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்களையும், மது விற்பனைக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story