மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் பகுதியில் மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின்பேரில், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் முசிறி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். புளியஞ்சோலை, வைரிசெட்டிப்பாளையம், நாகநல்லூர், எரகுடி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொப்பம்பட்டியை சேர்ந்த ஜெயக்கொடி(வயது 48), சிறுநாவலூரை சேர்ந்த சுரேந்தர்(44) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 40 பாட்டில்களை பறிமுதல் செய்த உப்பிலியபுரம் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசாருடன் துணை சூப்பிரண்டு யாஸ்மின் சோதனையில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.