சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்


சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
x

சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

நொய்யல் அருகே மூனூட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 36). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தனது தங்கை வீட்டிற்கு கரூர்- ஈரோடு சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் பின்னால் தஞ்சாவூர் ரத்தினசாமி நகர் பகுதியைச் சேர்ந்த அகிலன் (21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், முன்னாள் ராஜேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன், அகிலன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ராஜேந்திரன் கரூரில் ஒரு தனியார் மருத்துவமனையிலும், அகிலன் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து ராஜேந்திரனின் தந்தை கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் அகிலன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story