தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது


தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், கீழ்விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 20), 18 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் மதுகுடிப்பதற்காக அங்கே இருந்து உள்ளனர்.

அப்போது இவர்கள் இருவரும் இளங்கோவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி அவர்கள் 2 பேரும் சேர்ந்து இளங்கோவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.


Next Story