(செய்திசிதறல்) வெளிமாநில தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


(செய்திசிதறல்) வெளிமாநில தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

வெளிமாநில தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

வெளிமாநில தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வெளிமாநில தொழிலாளி

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாலமுருகன் என்கிற வெந்தகை பாலா (வயது 35), கணேஷ் (38) மற்றும் ஒரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணையில் பாலமுருகன் என்கிற வெந்தகை பாலா மீது கொள்ளையில் ஈடுபட்டதாக 5 வழக்குகளும், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடியதாக 3 வழக்குகளும், இரவு நேர பாதுகாவலரை கொலை செய்ததாக ஒரு வழக்கும், பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக ஒரு வழக்கு உட்பட 17 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கணேஷ் மீது வழிப்பறியில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதையடுத்து இவர்கள் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற குற்றங்கள் செய்து பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் எண்ணம் கொண்டவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், அவர்களின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர் ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் பாலமுருகன் என்கிற வெந்தகை பாலா, கணேஷ் (38) ஆகியோருக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் வழங்கப்பட்டது.

3 பேர் கைது

*திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் அக்பர்செரீப் (47). இவர் செல்போன் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, எதிரே ஆட்டோ மோதியது. இதில் நிலைகுலைந்து அக்பர் செரீப் கீழே விழுந்தார். அத்துடன் அவருடைய மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. இதுபற்றி அவர் ஆட்டோவில் வந்தவர்களிடம் கேட்க முயன்ற போது, அதில் வந்த 3 பேர் இவருடைய செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனா். இதுகுறித்து அக்பர்செரீப் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினார்கள். விசாரணையில், ஆட்டோவில் வந்து மோதி செல்போனை பறித்து சென்றது அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (28), லியோ (20), கார்த்தி (23) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது

*திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்காநகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை வைத்து, 2 பேர் விபசார தொழில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு புரோக்கராக செயல்பட்ட திருச்சி வாசன்நகர் பகுதியை சேர்ந்த கீதா (36) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சீனிவாசன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கீதாவிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு

* சமயபுரம் அருகே உள்ள ஒரு இடம் தொடர்பாக மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக லால்குடி பகுதியை சேர்ந்த இளையராஜா, மிதுன்சக்கரவர்த்தி, ஜான்சன்குமார், ரகுநாத் உள்பட 5 பேர்மீது மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மிதுன்சக்கரவர்த்தியை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாகி இருந்த இளையராஜா (40) ரகுநாத் (37) ஆகிய இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து இரண்டு பேரையும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண், 3-ல் ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story