உசிலம்பட்டி பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீரில் பால்கேனுடன் நீந்திய 2 பேர்- வீடியோ வைரலானது
உசிலம்பட்டி பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கிய மழைநீரில் பால்கேனுடன் நீந்திய 2 பேர்- வீடியோ வைரலானது
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதில் கண்மாய் உள்பட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கருமாத்தூர் அருகே கோவிலாங்குளம், முண்டுவேலம்பட்டி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் ெரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. .இதனால் இந்த கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலாங்குளம் கிராமத்தில் இருந்து மதுரை ஆவின் பால் மையத்திற்கு அனுப்புவதற்காக ஆட்டோவில் பால் கேன் கொண்டு வரப்பட்டது. அந்த பால் கேனை 2 பேர் ரெயில்வே சுரங்கப்பாதையின் கீழே தேங்கி இருந்த தண்ணீரில் நீந்தி சென்று மறுபுறம் கொண்டு சென்றனர். இந்த காட்சியை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது.
பாலத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.