சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் ரோந்து பணியில் இருந்த போது ஆதனக்கோட்டை அருகே குப்பையன்பட்டி கணபதி வயலில் சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைத்திருந்த வாகவாசலை சேர்ந்த கணபதி (வயது 45), கீழ முத்துக்காடை சேர்ந்த கற்பூர சோழன் என்கிற ராஜா (30) ஆகியோரை கைது செய்து புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 லிட்டர் சாராயம் மற்றும் பொருட்கள், ரொக்கம் ரூ.7,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story