கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
சரவணம்பட்டி
கோவை கீரணத்தம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது36). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று சரவணம்பட்டியில் இருந்து காளப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பேக்கரியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 நபர்கள் ராஜேந்திரனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். ராஜேந்திரன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கத்தி முனையில் ராஜேந்திரனை மிரட்டி அவரிடமிருந்து ரூ.800-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து ராஜேந்திரன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த நபர்கள் சின்னவேடம்பட்டி முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (26), பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (23) என்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்.