பட்டாசு பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
பட்டாசு பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டம்பட்டி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சாக்குபையுடன் நின்று கொண்டிருந்த கணஞ்சாம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40), ராஜேந்திரன் (30) ஆகிய 2 பேரிடம் சோதனை நடத்தினார். அப்போது அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் சாக்குப்பையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 20 கிலோ சோல்சா வெடிகள், 10 குரோஸ் வெள்ளை திரி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story