அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள கோதைநாச்சியார்புரத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் போலீசார் விஜயரங்கபுரம், மேல கோதை நாச்சியார்புரம், கீழகோதை நாச்சியார்புரம் ஆகிய பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கீழ கோதை நாச்சியார்புரம் காலனியை சேர்ந்த குருசாமி (வயது 45), சோலையப்பன் (43) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து தலா 30 கிலோ சோல்சா வெடிகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story