போலீஸ் போல் நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
போலீஸ் போல் நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்காநல்லூர்
போலீஸ் போல் நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வியாபாரி
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 54). வியாபாரி. இவர் இருகூர் ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 பேர், சிவலிங்கத்திடம் தாங்கள் போலீஸ்காரர்கள் என்றும், உங்கள் கடையில் திருட்டு பொருட்க ளை வாங்கி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. அது குறித்து விசாரிக்க வந்து உள்ளதாக கூறினர்.
பணம் கேட்டு மிரட்டல்
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவலிங்கம், என் கடையில் திருட்டு பொருட்களை வாங்குவது இல்லை என்றார். உடனே அவர்கள் 2 பேரும் விசாரிக்க வந்ததற்காக ரூ.1,000 தர வேண்டும் என்று கேட்டு மிரட்டினர்.
இதனால் பயந்து போன சிவலிங்கம் அவர்களுக்கு பணம் கொடுத்தார். அப்போது இரும்பு கடை சங்கத்தை சேர்ந்த ஒருவர் வந்தார். அவர் அந்த 2 பேரிடமும் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.
2 பேர் கைது
இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த 2 பேரையும் பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் கள் விருதுநகரை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கமணி (57), அவரது நண்பர் கோவை அண்ணா நகரை சேர்ந்த காவலாளி பூபதி குமார் (49) என்பதும், அவர்கள் போலீசார் என்று கூறி மிரட்டி சிவலிங்கத்திடம் பணம் பறித்ததும் தெரியவந்தது.
இது சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கமணி, பூபதிகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.