போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 2 பேர் கைது


போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 2 பேர் கைது
x

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் திம்மராஜபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி மகன் முத்துக்குட்டி (வயது 26), நாராயணன் மகன் கிருஷ்ணன் (35) ஆகியோர் என்பதும், அவர்கள் சாக்குப்பையில் மது பாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குட்டி, கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story