மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள மாமரம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் வைத்து னுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் பாரிவள்ளல் தெருவை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் நடராஜன் (வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று கோத்தகிரி அருகே கப்பட்டி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் ( 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story