மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2022 6:45 PM GMT (Updated: 2022-10-03T00:15:12+05:30)

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கோத்தகிரி,

காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் காமராஜர் சதுக்கம் பகுதியில் திடீர் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் மது விற்ற எஸ்.கைகாட்டியை சேர்ந்த நந்தகுமார் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோத்தகிரி அருகே உள்ள குண்டாடா பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், மதுபாட்டில்களை விற்பனை செய்த குண்டாடா நடுஹட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story