மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி அருகே இடுஹட்டி ஊனமுற்றோர் காலனி பகுதியில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் மதுபாட்டில்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி கிராம பகுதியில் திடீர் மது விலக்கு சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் வைத்து ஒருவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஓம்.நகர் கிராமத்தை சேர்ந்த கமலநாதன் (57) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.