மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2022 6:45 PM GMT (Updated: 2022-10-11T00:15:18+05:30)

குலசேகரன்பட்டினத்தில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

தூத்துக்குடி முத்தையாபுரம் மேல தெருவை சேர்ந்த செல்வ அந்தோணி மகன் ஆரோக்கியம் (வயது 26), மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த ஷேக் முகமது மகன் காதர்பாட்சா (47) ஆகிய 2 பேரும் குலசேகரன்பட்டினம் தருவை இசக்கியம்மன் கோவில் பகுதியில் மது விற்று கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று, மதுவிற்றுக் கொண்டிருந்த அந்த 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 57 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்ற ரூ.6 ஆயிரத்து 70 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story