மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

புன்னம் சத்திரம் அருகே பெரியரெங்கம்பாளையம் பகுதியில் ேவலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெரிய ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திலகவதி (வயது 49) என்பவர் அந்த பகுதியில் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் செம்பியநத்தம் ஊராட்சி பகுதியில் வீட்டின் அருகே மது விற்று ெகாண்டிருந்த மம்பத்தையூரை சேர்ந்த ரவி (48) என்பவரை பாலவிடுதி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story