மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனி, வஞ்சிபுரம் பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றபோது அந்தப் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 57) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். இதேபோல் வடக்கிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி செல்லப்பம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றபோது அந்தப் பகுதியில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக பரமக்குடியை சேர்ந்த அன்பழகன் (43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 48 மதுபான்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story