பொள்ளாச்சியில். மது விற்ற 2 பேர் கைது -30 மதுபாட்டில்கள் பறிமுதல்


பொள்ளாச்சியில். மது விற்ற 2 பேர் கைது -30 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 May 2023 1:15 AM IST (Updated: 29 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் சட்டவிரோதமாக மது, கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனைசெய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பொள்ளாச்சி மேற்கு போலீசார் மார்க்கெட் ரோடு ரெட்டைகண் பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த நபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், புதுக்கோட்டை அருகே நரிக்குடியைச் சேர்ந்த செல்வகணபதி(வயது 20) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள், ரூ.850 மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சட்டவிரோதமாக மது விற்றதாக முனிராஜ்(21) என்பவரும்

கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story